சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும். உமையம்மை சிவபெருமானைக் குறித்து பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.